விமர்சனம்

அகவன் – திரைப்பட விமர்சனம்

திண்டிவனம் பக்கத்தில் அனந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் எல்லா வேலைகளையும் பார்ப்பவராக இருக்கிறார் கிஷோர் ரவிச்சந்திரன். அவருக்கு உறுதுணையாக தம்பி ராமையா இருக்கிறார்.

அந்தக் கோவிலில் இரவு நேரங்களில் யாரோ சிலர் நடமாடுவதைக் கவனித்து கிஷோர் இரவு நேரங்களில் கூடுதலான கவனத்துடன் காவல் காக்கிறார்.

ஒரு நாள் இரவில் அப்படி வந்து போனவர்களில் ஒருவர் யார் என்று கண்டுபிடிக்கிறார். அவர்தான் படத்தின் நாயகி, கோவிலில் பூ விற்கும் சிராஸ்ரீ. அவரைச் சந்தித்து கேட்டபின்தான் பல உண்மைகள் கிஷோருக்குத் தெரிய வருகிறது. அதில்தான் படத்தின் கதையும் இருக்கிறது.

முழுப் படமும் ஒரு கோயிலைச் சுற்றியே எடுக்கப்பட்டிருக்கிறது. ராஜராஜ சோழன் வரலாறு, புதையல், அதை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் என கதைக்களம் புதிதாக அமைந்திருக்கிறது.

படத்தின் நாயகன் கிஷோர் ரவிச்சந்திரன்,நாயகிகளாக சிராஸ்ரீ, தங்கை நித்யா ஷெட்டி ஆகிய இருவர்.

மூவரும் கதாபாத்திரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

நாயகன் கூட வரும் தம்பி ராமையா அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் பாபு பழனியப்பனின் படத்துக்குப் பலம் சேர்க்கிறது. இரவுக்காட்சிகளில் அவருடைய திறமை தெரிகிறது.

சி.சத்யாவின் இசையில் யுகபாரதியின் வரிகளில் வரும் பாடல்கள் கதைக்குப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன.

இயக்குநர் ஏபிஜி ஏழுமலை விறுவிறுப்பான த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.

வித்தியாசமான கதைக்களம், தொல் தமிழர்களின் பெருமை ஆகியன படத்தைக் கவனிக்க வைக்கிறது.

Related Posts