வனங்களைக் காக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் காடனுக்கும் வனத்தைப் பணமாக்க என்னும் பணந்தின்னிகளுக்கும் நடக்கும் போர்தான் காடன். காட்டில் திரியும் யானைகளைப் பேர் சொல்லி அழைப்பது, மரங்கள் மற்றும் செடிகளோடு பேசுவது, பறவைகளோடு உரையாடுவதென காடன் என்கிற பெயருக்கேற்ற வேடத்தை
விமர்சனம்
நாயகன் அருள் மற்றும் அவரது நண்பர்கள் ஆவணப்படமொன்றின் படப்பிடிப்புக்காக காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள். அப்போது, அவர்கள் செல்லும் மகிழுந்து விபத்துக்குள்ளாகிறது. நடுக்காட்டில் சிக்கிக் கொள்ளும் நண்பர்கள், அந்தக் காட்டில் இருக்கும் வீடொன்றில் அடைக்கலம் தேடிச்செல்கிறார்கள். அந்த வீட்டில் வாய் பேச முடியாத பெரியவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் உதவி கேட்டு அந்த வீட்டில்
புதுமணத் தம்பதி கெவின் சாரா தேவா தேனிலவுக்குச் செல்கின்றனர். போன இடத்தில், நாம மொதல்ல பழகுவோம், அப்புறம்தான் அதெல்லாம் என்கிறார் நாயகி சாரா தேவா. பேரதிர்ச்சி அடையும் நாயகன் என்ன செய்தார்? அடுத்து என்னவெல்லாம் நடந்தது என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றிருக்கும் படம் பூம்பூம் காளை. நாயகன் கெவின் அப்பாவித் தோற்றம் தருகிறார். நன்றாக நடனமாடுகிறார். நடிப்பில் இன்னும் முன்னேற்றம்
மதுரை மண் வாசத்தோடு வீரம், காதல், நட்பு ஆகியனவற்றைப் பேசும் படம்தான் கணேசாபுரம். அக்கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் நெருங்கிய நண்பர்கள். திருட்டையே தொழிலாகச்செய்யும் பசுபதிராஜிடம் திருடர் வேலை செய்கிறார்கள். அதனால் சிக்கலுக்கு ஆளாகின்றனர். அதேநேரம் நாயகன் சின்னாவுக்குக் காதல் வருகிறது. ஒரு பக்கம் பகை இன்னொரு பக்கம் காதல் இவற்றிற்கிடையே
நட்புக்குள் துரோகம் நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைச் சொல்லும் இன்னொரு படம். ராசுரஞ்சித்,ஈசன்,சந்தீப்ராஜ் ஆகியோர் சின்னச்சின்ன திருட்டுகளில் ஈடுபடுகிறவர்கள். ஒரு திருட்டின்போது ராசுரஞ்சித்தும் ஈசனும் காவல்துறையில் மாட்டிக் கொள்கிறார்கள். சந்தீப்ராஜ் தப்புகிறார். சிறையில் இருந்து இருவரும் வெளிவந்தபின்பும் சந்தீப்ராஜின் துரோகத்தால் நண்பர்கள் வாழ்க்கையே
இயல்பான மனித சக்தியைவிடப் பன்மடங்கு சக்தி வாய்ந்தவராக இருக்கிறார் ஆர்யா. அதாவது மூன்று வருடங்கள் படிக்க வேண்டிய படிப்பை அதன் தன்மை மாறாமல் தரம் குறையாமல் இரண்டே மாதங்களில் முடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர். அப்படிப்பட்டவர் வாழ்க்கையில் ஒரு கரடிபொம்மை வருகிறது. வரும்போதே ஒரு பெரும் சிக்கலோடு வருகிறது. அதைச் சரிசெய்யக் களமிறங்குகிறார் ஆர்யா. கரடிபொம்மைக்கு என்ன சிக்கல்? அது
கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் முற்றுமுழுக்கக் கெட்டவனாக நடித்திருக்கும் படம் மிருகா. மறைமுகமாகவெல்லாம் இல்லாமல் முதல்காட்சியிலேயே அவர் எவ்வளவு கொடூரமானவர் என்பதைக் காட்டியே படம் தொடங்குகிறது. கொடூரக் கொலைகாரர் வேடத்துக்கு ஏற்ப நடிக்க முயன்றிருக்கிறார் ஸ்ரீகாந்த்.ராய்லட்சுமி, நைரா,வைஷ்ணவிசந்திரன்,த்விதா ஆகிய அழகிய பெண்களுடன் நெருங்கி நடிக்கும் வாய்ப்பைச்
அருண்பாண்டியன் ஆயுள்காப்பீட்டுக்கழக முகவராக இருக்கிறார். மனைவி இல்லை. ஒரே ம்கள். செவிலியர் படிப்பு முடித்துவிட்டு வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து அப்பாவின் கடனை அடைத்தாக வேண்டும் என்கிற இலட்சியத்துடன் இருக்கிறார். பகுதி நேரமாக ஒரு கோழி உணவுக் கடையில் வேலை பார்க்கிறார். பார்ப்போர் கண்படுகிற மாதிரி அன்பான அப்பா மகளாக இருக்கும் அவர்களுக்கிடையே ஒரு சின்ன விரிசல். அந்த
விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய போராட்டங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட தறியுடன் என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் சங்கத்தலைவன். கருணாஸ் சுனுலட்சுமி உள்ளிட்டோர் விசைத்தறிக் கூடத்தில் வேலை பார்க்கிறார்கள். அவர்களுடன் பணிபுரியும் பெண்ணுக்கு விபத்து நேர்ந்து ஒரு கையை இழக்கிறார். அதற்கு சரியான இழப்பீடு கேட்டுப் போராடுகிறது சங்கம்.
டிஜிட்டல் இந்தியா என்கிற பெயரில் எல்லாவற்றையும் இணையம் மூலம் செய்யுங்கள் என்று அரசாங்கமும் பன்னாட்டு நிறுவனங்களும் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவற்றால் எவ்வளவு ஆபத்துகள் இருக்கின்றன என்பதைச் சொல்லியிருக்கிறது சக்ரா. இராணுவ வீரராக அட்டகாசமாக அறிமுகமாகிறார் விஷால். அதன்பின் படம் முழுக்க ஓட்டம்தான். ஒரு விசாரணை அதிகாரி வேடத்துக்கு முழுமையாகப் பொருந்தி இருக்கிறார்.
























