Home Archive by category செய்திகள் (Page 304)

செய்திகள்

சினிமா செய்திகள் நடிகர்

ரஜினியை கெட்டவார்த்தையில் திட்டிய நடிகர் – படப்பிடிப்பில் பரபரப்பு

பள்ளிப் படிப்பின் போதே நாடகங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய செந்தில், கல்லூரியிலும் நாடகத்தை விடாமல் தொடர்ந்தார். ஆண்டுவிழாக்களில் மட்டுமின்றி அடிக்கடி நாடகங்கள் எழுதி அரங்கேற்றுவதில் முனைப்பாக இருந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் அன்றாட வாழ்க்கையின் பின்னால் ஓடவேண்டிய கட்டாயம். பெண்டா மீடியா
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்துக்கு நாயகியை உறுதி செய்த ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படத்தின் திரைக்கதை எழுதும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இந்தப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. படத்தின் கதை மற்றும் சம்பள விசயங்கள் சரியாக அமைந்துவிட்டதால் நயன்தாரா நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கிறதாம். 2019
சினிமா செய்திகள் நடிகர்

நேர்மை குறித்து மனைவிக்குப் பாடம் எடுப்பாரா ரஜினி?

ஈரோட்டில் உள்ள ஓர் அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் யாசின். ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த பாட்ஷா- அப்ரோஸ் பேகம் தம்பதியினரின் மகன். வாடகை வீட்டில் பொருளாதாரச் சிரமங்களுடன் வளரும் யாசின் பள்ளி செல்லும் வழியில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்று தன் ஆசிரியரிடம் ஒப்படைத்தார். யாசினின் நேர்மையைக் கண்டு வியந்த அவரது ஆசிரியர்
சினிமா செய்திகள் நடிகை

ஏ.ஆர்.முருகதாஸ், லாரன்ஸ் மீது குற்றம் சொல்லும் ஶ்ரீரெட்டி நல்லவரா? – அதிரும் கேள்வி

தமிழ் சினிமாவுக்கு இது அடுத்து ஒரு ஆசிட் டெஸ்ட். முன்பு சுசி லீக்ஸ். அடுத்து இப்போது தமிழ் லீக்ஸ்.. ’லீக்’ ஆகும் சமாச்சாரம் என்பதால் தற்போது கோடம்பாக்கத்தின் ஸ்டேட்டஸ் பீதியின் ’பீக்’. அணு குண்டே ஆனாலும் அதை அசால்ட்டாக கேட்ச் பிடித்து, அதை வைத்தே பெளலிங் போட்டு, எதிரியின் விக்கெட்டை வீழ்த்தும் அக்கட தேசத்து பவர்ஃபுல் ஹீரோக்களே ’ஸ்ரீரெட்டி’ என்றால் தெறித்து ஓடினார்கள்..
சினிமா செய்திகள்

நாடோடிகள் 2 படத்தில் காலா பட கலைஞர்கள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் 2 உருவாகி வருகிறது. இதில் சசிகுமார், அஞ்சலி கதாநாயகன்,கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களோடு பரணி,அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன்,ஞானசம்பந்தம்,துளசி,ஸ்ரீரஞ்சனி,சூப்பர் சுப்பராயன், ராம்தாஸ்,கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து பட வெளியீட்டுக்கான வேலைகள்
சினிமா செய்திகள் நடிகர்

காலா படப்பிடிப்பில் ரஜினி பயந்தது எதற்காக?

ஒரு நடிகராக ரஜினி எல்லாவித வேடங்களையும் செய்திருக்கிறார். சண்டை, நடனம் என்று எல்லாவற்றையும் சரியாகவே செய்திருக்கிறார். ஆனால், காலா படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட போது அவர் பயந்த நிகழ்வும் நடந்திருக்கிறது. படத்தில், ரஜினியின் திருமணநாள் கொண்டாட்டம் நடக்கும். அப்போது, வாடி என் தங்கச்சிலை என்கிற பாடல் இடம்பெற்றது. திருமணநாளையொட்டி நடக்கும் கொண்டாட்டம் என்பதால், ரஜினி
சினிமா செய்திகள்

பிக்பாஸை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய காயத்ரி ரகுராம்

சிகரெட் பிடிப்பதால் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று பெண்கள் நினைப்பது இல்லை. ஆண்களைப் போலவே அதே விரக்தி காரணமாகத்தான் பெண்களும் சிகரெட் பிடிக்கிறார்கள். இந்தப் பழக்கம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் நல்லது இல்லை. ஆண்களை உயர்ந்தவர்கள் போலவும் அவர்களை காப்பி அடிப்பவர்கள்தான் பெண்கள் என்பது போலவும் செய்ய வேண்டாம். இது போலியானது” என்று காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கூறியிருந்தார்.
சினிமா செய்திகள் நடிகர்

தன் முதல்பட இசையமைப்பாளருக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமான முதல்படம் மெரினா. 2012 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு இசையமைத்திருந்தவர் கிரிஷ். அவர் தற்போது இசையமைத்திருக்கும் புதிய படம் பக்சி. இந்தப்படத்தின் முதல் பாடலை ஜூலை 11 அன்று வெளியிட்டார்கள். அந்தப்பாடலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். தன்னுடைய முதல்பட இசையமைப்பாளர் என்கிற நன்றியோடு அவர் பாடலை
சினிமா செய்திகள் நடிகர்

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் தனுஷ் படம்

தனுஷ், மேகா ஆகாஷ் உட்பட பலர் நடிப்பில் கெளதம் மேனன் எழுதி இயக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா.எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கிறார். சில காரணங்களால் தாமதமான இந்தப்படம் இப்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. ஜூலை 16 ஆம் தேதி இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். தொடர்ந்து இருபது நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் அதோடு மொத்தப்
சினிமா செய்திகள் நடிகர்

லதாரஜினியின் வாதத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் – ரஜினிக்கு தொடரும் அவப்பெயர்

ரஜினிகாந்த் நடித்து 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ திரைப்படம் தொடர்பான சிக்கல் இன்னும் தொடர்கிறது. கோச்சடையான் படம் தயாரிப்பு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ‘ஆட் பீரோ’ நிறுவனத்துக்கும், லதா ரஜினிகாந்தை இயக்குநராகவும், அவருடைய மகள் சவுந்தர்யாவை தலைவராகவும் கொண்டு இயங்கும் ‘மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டு இருந்தது.