சினிமா செய்திகள் நடிகர்

கலைஞர் அஞ்சலிக்கு சென்னையில் இருந்தும் சிம்பு வராதது ஏன்?

திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் இறுதிநிகழ்வுகள் நேற்று (ஆகஸ்ட் 8) நடந்தன.

அதிகாலை முதல் மாலை நான்கு மணி வரை பொதுமக்கள் மற்றும் அரசியல்தலைவர்கள் இறுதிவணக்கம் செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் கலைஞர் உடல் வைக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி, ராகுல்காந்தி உட்பட இந்திய தமிழக அரசியல்தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அதிகாலையிலேயே ரஜினி,தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

கமல், அஜீத், சூர்யா,விஷால், விஜய்சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

விஜய்,விக்ரம் ஆகியோர் வெளிநாடுக்ளில் படப்பிடிப்பில் இருப்பதால் வர இயலவில்லை என்பதைத் தெரிவித்திருந்தார்கள்.

சென்னையிலேயே இருந்தும் நடிகர் சிம்பு வரவில்லை. ஏன்?

பிரதமர் மோடி சென்ற பிறகு அஞ்சலி செலுத்தப் போகலாம் என்று திட்டமிட்டிருந்தாராம் சிம்பு.
ஏனெனில் மோடி வருகிறார் என்பதால் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம் இருந்தன.

சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் உள்ளே சென்று வருவதே பெரும்பாடானது என்பதை ஊடகங்கள் முன்பு பதிவு செய்தார்.

ஆனால் மோடி சென்ற பின் நிகழ்ந்த குளறுபடிகளால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இருவர் மரணம், பலர் படுகாயம் எனும் நிலை.

இதனால் பிரபலங்கள் வருவதும் பெரும்பாடானது.

இந்தத் தகவல்களைக் கேள்விப்பட்டதால் சிம்பு போகவில்லை என்று சொல்கிறார்கள்.

Related Posts