தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் சார்பில் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. இதில் இயக்குநர் வெற்றிமாறன், கரு.பழனியப்பன், பா.ரஞ்சித், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது:- என் தந்தை தீவிர தி.மு.க ஆதரவாளர். அவர் கலைஞரின் தீவிர ரசிகர்.
ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்த கலைஞர் மு.கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழ்த் திரைப்படத் துறையினரால் ஆகஸ்ட் 13 அன்று சென்னை காமராசர் அரங்கில் நடத்தப்பட்டது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளார்கள் சம்மேளனம் (FEFSI), தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம், தமிழ்நாடு
திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் இறுதிநிகழ்வுகள் நேற்று (ஆகஸ்ட் 8) நடந்தன. அதிகாலை முதல் மாலை நான்கு மணி வரை பொதுமக்கள் மற்றும் அரசியல்தலைவர்கள் இறுதிவணக்கம் செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் கலைஞர் உடல் வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, ராகுல்காந்தி உட்பட இந்திய தமிழக அரசியல்தலைவர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலானோர் வந்து அஞ்சலி செலுத்தினர்.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. ஆகஸ்ட் 7-ம் தேதி மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்தது. கருணாநிதியின் மறைவு குறித்து அஜித் விடுத்துள்ள அறிக்கையில், “முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா சொல்வன்மை, மொழிப்புலமை,
பா.விஜய் எழுதி இயக்கி நடித்துள்ள படம் ஆருத்ரா. இந்தப்ப படத்தின் பாடல் வெளியீட்டுவிழா ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை சென்னையில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது . இந்நிலையில். திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் மிகவும் மோசமடைந்திருப்பதாகச் சொல்லப்பபட்டது. அதன் காரணமாக,எமது தமிழினத் தலைவர் உடல் நிலை குறித்த தகவல்களை கருத்தில் கொண்டு நாளை நடைபெறவிருந்த ஆருத்ரா இசை வெளியீட்டு

















