Home Archive by category செய்திகள் (Page 127)

செய்திகள்

சினிமா செய்திகள்

நயன்தாராவும் விஜய்சேதுபதியும் இப்படிச் செய்யலாமா? – தகிக்கும் விமர்சனம்

2021 ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள். இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் இருக்கின்றன. அத்தொடரில்
சினிமா செய்திகள்

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் பாண்டிராஜ்?

சிவா இயக்கத்தில் தயாராகும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அண்ணாத்த படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார் என்றும் அந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பது ஏஜிஎஸ் நிறுவனம் என்றும் சொல்லப்பட்டது. படத்தின்
சினிமா செய்திகள்

சிம்பு மைக்கேல் ராயப்பன் சிக்கல் – உஷாராஜேந்தர் அதிரடி கடிதம்

கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடந்தது. அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமுன்பு பெரிய சிக்கல் ஏற்பட்டது. நடிகர் சிம்பு மீது நான்கு தயாரிப்பாளர்கள் புகார் கொடுத்திருப்பதால் அச்சிக்கல் தீரும்வரை புதிய படத்தின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் என்று
Uncategorized சினிமா செய்திகள்

அட்லி ஷாருக்கான் படத்தில் இணைந்த அனிருத் – தமிழ்க்கலைஞர்கள் உருவாக்கும் இந்திப்படம்

2019 அக்டோபர் 25 அன்று வெளியான படம் பிகில். அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதற்கடுத்து இயக்குநர் அட்லி, இந்தியில் பெரிய நடிகராக இருக்கும் ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இந்திப்படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கிறார்.
சினிமா செய்திகள்

நடிகை சித்ரா திடீர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி

தொண்ணூறுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் சித்ரா. என் தங்கச்சி படிச்சவ, ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நாயகர்களுக்குத் தங்கை வேடமேற்று நல்ல வரவேற்பைப் பெற்றவர். நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என்றழைக்கப்பட்டார். பல ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அவர்,2020 இல் வெளியான என் சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா என்கிற படத்தில் நடித்திருந்தார்.
சினிமா செய்திகள்

கதாநாயகனாக நடிக்கும் ஆதேஷ்பாலா

ஆறு, மலைக்கோட்டை, குருவி, மம்பட்டியான்,சவரக்கத்தி, பேட்ட, உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் ஆதேஷ் பாலா. இப்போது அந்தகன், பொன்னியின்செல்வன் உட்பட பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நகைச்சுவை நடிகர் சிவராமனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய திரையில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்தாலும் குறும்படங்களில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
சினிமா செய்திகள்

பத்தாண்டுகள் நீடித்த வழக்கு – இயக்குநர் பாலா விடுதலை

இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அவன் இவன்’. ஆர்யா, விஷால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்து ஐயனார் கோயில் பற்றியும் அவதூறாகச் சித்திரித்து இருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிங்கம்பட்டி ஜமீன், மறைந்த முருகதாஸ் தீர்த்தபதியின் மகன் சங்கர் ஆத்மஜென் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
சினிமா செய்திகள்

சந்தானத்தின் டிக்கிலோனா – வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சந்தானம் நடிப்பில் தயாராகியுள்ள படம் டிக்கிலோனா.புதுஇயக்குநர் கார்த்திக்யோகி இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் சந்தானத்தோடு ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை புகழ் அனகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களோடு யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மொட்டை
சினிமா செய்திகள்

விஷாலை துன்புறுத்திய தயாரிப்பு நிறுவனம் – தண்டம் விதித்த நீதிமன்றம்

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியிருந்த அந்தப் படம் பிப்ரவரி 19 அன்று வெளியானது. அப்பட வெளியீட்டின்போது பல சிக்கல்கள் எழுந்தன/ விஷால் நடித்த ‘ஆக்‌ஷன்’ படத்தின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் சக்ரா படத்துக்குத் தடை கோரி ட்ரைடண்ட் நிறுவனம் சென்னை உயர்
சினிமா செய்திகள்

விஜய் தனுஷ் ஆகியோரைத் தொடர்ந்து சூர்யாவுக்கெதிராகவும் உத்தரவு

நடிகர் சூர்யா வீட்டில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில், 2007-2008 ஆம் ஆண்டு மற்றும் 2008-2009 மதிப்பீட்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.இதை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா தரப்பிலும், வருமான வரி தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.