தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி. இப்போது கார்த்திக்சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு பாதி முடிவடைந்துவிட்டது. ஓரிரு மாதங்களில் மீதியும் முடிவடைந்துவிடும். அதற்கடுத்து ஒரு படத்தில் நடிக்க, கதைத்தேர்வு மற்றும் இயக்குநர் தேர்வு
சினிமா
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் கடந்த 28-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. இதனால் அவரது உடல்நிலை சீரானது. கடந்த 29-ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு ஒத்துழைத்ததால் அவரது
திமுக தலைவர் கலைஞர்கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஜூலை 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு
2016 ஆம் ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘நரகாசூரன்’. இப்படத்தில் அரவிந்த்சாமி, மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அரசியலிலலும் மூத்த தலைவர் என்பது மட்டுமின்றி கலைத்துறையில் தீவிர ஈடுபாடு காட்டியவர். இந்தியாவின் முதல்குடிமகனான குடியரசுத்தலைவர், பிரதமர் மோடி ஆகியோர் அவரைப் பற்றி விசாரித்து பதிவு போடுகிறார்கள். நேரடி எதிரிகளான அதிமுகவைச் சேர்ந்த தமிழக
விக்ரம்பிரபு நடிக்கும் புதியபடம் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. கலைப்புலிதாணு தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கும் புதியபடம் அறுபது வயது மாநிறம். இந்தப்படத்தில் முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனியும் பிரகாஷ்ராஜும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார். 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோதி பண்ணா சாதாரண மைகட்டு என்கிற படத்தின் தமிழாக்கம்தான்
ஸ்ரீரெட்டி, தெலுங்கு மற்றும் தமிழ்த்திரையுலகில் பெயர் குறிப்பிட்டு பலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அவர் குற்றம் சாட்டிய யாரும் பதில் அளிக்காத நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அவருக்குப் பதில் சொல்லும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் ஸ்ரீரெட்டி கூறிய குற்றச்சாட்டை மறுத்ததோடு, அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வழங்க தான் தயாராக இருப்பதாக
இளன் என்கிற இயக்குநர் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் மற்றும் ரைசா நடித்திருக்கும் படம் பியார் பிரேமகாதல். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா இந்தப்படத்தின் தயாரிப்பாளர். இந்தப்படத்தின் இசை வெளியீட்டுவிழா அண்மையில் நடந்தது. விழாவில், இளையராஜா, சிம்பு, தனுஷ், விஜயசேதுபதி, அமீர், சீனுராமசாமி, அகமது,ராம்,படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண், நாயகி ரைசா,இயக்குநர் இளன், ஜெயம் ரவி, ஆர்யா,
கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்த படம் ஜுங்கா. ஜூலை 27 அன்று வெளியான இந்தப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதோடு நல்ல வசூலையும் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் பெரிய விலைக்குப் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய்சேதுபதி படங்களுக்கு இதுவரை கிடைக்காத அளவு இந்தப்படத்தின்
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் காற்றின் மொழி. சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இப்படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஜோதிகா




















