October 18, 2026
சினிமா செய்திகள் நடிகர்

விஜய் காலில் காயம் – திருமண விழாவில் பரபரப்பு

விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவர் ஆனந்த், புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் பகுதி அருகே உள்ள சங்கமித்திரா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் விஜய் கலந்துகொள்கிறார் என்பதால், புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்கள், அவரை வரவேற்க, கட்அவுட், சுவரொட்டிகள் என திரும்பிய பார்க்கும் இடமெல்லாம் விஜய் படங்கள் இருக்கும் அளவிற்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்.

தன் மனைவி சங்கீதாவுடன் மணமேடை வந்து மணமக்களை வாழ்த்தியபோது ரசிகர்களின் நெரிசலை பவுன்சர்களாலும் சமாளிக்க முடியவில்லை.

அதனால் விஜய்யின் காலில் லேசான காயம் பட்டது. மண்டபத்திலிருந்து வெளியே வந்தபோதும், ரசிகர்கள் கூச்சலிட ஆரம்பித்ததால் பரபரப்பு நிலவியது. பிறகு காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து விஜய்யை பத்திரமாக அனுப்பி வைத்தனராம்.

Related Posts