சிம்புவின் புதிய படம் ஜார்ஜியாவில் தொடங்கியது
த்ரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் ‘அத்திரண்டிகி தாரேதி’. 2013-ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது.
4 நந்தி விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளையும் வென்றது. மேலும், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமன்றி கன்னடம், பெங்காலி மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது.
அப்படத்தின் தமிழில் எடுக்கும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றிருக்கிறது.
இந்தப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். சுந்தர்.சி இயக்குகிறார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
எவ்வித அறிவிப்புமின்றி, இந்தப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15 அன்று ஜார்ஜியாவில் தொடங்கியிருக்கிறது.பெரும்பகுதி படப்பிடிப்பு அங்கே நடக்கும் என்று சொல்லப்படுகிறது.











