சினிமா செய்திகள் நடிகர்

கோலமாவு கோகிலா வுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து, ஏன்?

புது இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் படம் கோலமாவு கோகிலா.

அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் முன்னோட்டம் ஜூலை 5 மாலை வெளியிடப்பட்டது.

வெளியிட்டவுடன் பல இலட்சம் பாரவையாளர்களைச் சென்றடைந்த அந்த முன்னோட்டத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

தன்னுடைய ட்விட்டரில், சூப்பர் ட்ரெய்லர் பெரிய வெற்றி பெறும் என்று வாழ்த்தியிருக்கிறார்.

இந்தப்படத்தில் அவர் ஒரு பாடலாசிரியராக மாறி பாடல் எழுதியிருக்கிறார். வாழ்த்துச் சொன்னதற்கு அது காரணமல்ல.

நயன்தாராவோடு நடிக்கிறார், அனிருத் இருக்கிறார் ஆகியனவற்றைத் தாண்டி,

படத்தின் இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் நண்பர். பல போராட்டங்களைச் சந்தித்து இந்த இடத்துக்கு வந்திருக்கிறார் என்பதால் இந்த வாழ்த்து என்று சொல்கிறார்கள்.

Related Posts