சினிமா செய்திகள் நடிகர்

கிடைத்த வாய்ப்பை நழுவ விட்ட அதர்வா – காரணம் என்ன?

நடிகர் அதர்வா நடித்த படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றாலும் வசூல் ரீதியாகப் பெரிதாக இல்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்மையில் வெளியான இமைக்கா நொடிகள் படம் வசூல் வெற்றி என்றாலும் அதற்கு அதர்வா காரணமில்லை என்பதை அவரே அறிவார்.

இப்போது அவர் கைவசம் இருக்கும் ஒத்தைக்கு ஒத்த உட்பட சில படங்களும் நகராமல் இருக்கின்றன.

இந்நிலையில், புது இயக்குநர் யு.அன்பரசன் இயக்கத்தில் அர்ஜூன், ஜாக்கிஷெராப் ஆகியோரோடு இணைந்து நடிக்கும் வாய்ப்பு அதர்வாவைத் தேடி வந்திருக்கிறது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட அந்தப்படத்தில் அர்ஜூன் ஜாக்கிஷெராப் ஆகியோரோடு விக்ரம்பிரபு நடிக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது.

அதர்வா என்னவானார்?

இப்படத்தில் நடிப்பது தொடர்பாக அதர்வா தரப்பை அணுகிய போது கதை பற்றிக்கூட கேட்காமல் என் சம்பளம் என்று ஒரு பெரிய தொகையைச் சொல்லியிருக்கிறார்கள்.

எந்தப்படமும் ஓடாத நிலையில் இவ்வளவு சம்பளமா? என்று படக்குழுவினருக்கு அதிர்ச்சி. இதனால் போன வேகத்திலேயே திரும்பிவந்து விட்டதாம் படக்குழு.

அதன்பின் விக்ரம்பிரபு நடிக்கிறார் என்று செய்தி வந்ததும், கிடைத்த வாய்ப்பு பறிபோய்விட்டதே என்று அவர் வருந்துவதாகச் சொல்லப்படுகிறது.

Related Posts