சினிமா செய்திகள் நடிகர்

பிக்பாஸ் காப்பாற்றுவாரா ? – புது நடிகரின் எதிர்பார்ப்பு

பிக்பாஸ் முதல்பாகத்தின் வெற்றியாளர் ஆரவ்.
பிக்பாஸூக்கு வருவதற்கு முன் விளம்பரங்களில் நடித்தவர் ஆரவ்.

“ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் அவர் படத்தில் நடிக்கப்போகிறார் என செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

ஆனால், அது குறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையே, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீஸன் 2-ல் விருந்தினராகச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இவரின் முதல் படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘ராஜபீமா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. புதுமுக இயக்குநர் சந்தோஷ் நரேஷ் படத்தை இயக்குகிறார்.

வெளியிடப்பட்டுள்ள முதல்பார்வையில் யானையுடன் உள்ளார் ஆரவ்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “இது எனக்கு முக்கியமான நாள். எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி. இது நிச்சயம் நல்ல படமாக இருக்குமென நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸில் கிடைத்த புகழால் அவருக்கு இந்தப்படம் கிடைத்தது. அதே பிக்பாஸ் புகழ் படத்தின் வெற்றிக்கு உதவுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

Related Posts