சி.வி.குமாரின் ஜாங்கோ பட டிரெய்லர் எங்கிருந்து சுடப்பட்டது தெரியுமா?
குறிப்பிட்ட நாளின் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நிகழ்வதை நேர வளையம் (டைம்லூப்) என்கிறார்கள்.தமிழ்த் திரையுலகில் காலப் பயணம் (டைம் டிராவல்) அடிப்படையிலான திரைப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன, ஆனால் டைம் லூப் அடிப்படையிலான படம் எதுவும் எடுக்கப்படவில்லை.
இப்போது, முதல் திரைப்படமாக உருவாகிறது என்று அறிவிக்கப்பட்ட படம் ஜாங்கோ.
இந்தப் படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார்.இவர், அறிவழகன் இயக்கிய ஈரம் மற்றும் வல்லினம் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகவும் ராம்குமார் இயக்கிய முண்டாசுப்பட்டியில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர். சில குறும்படங்களையும் ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார்.
சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இப்படத்தின் முன்னோட்டம் அக்டோபர் 12 ஆம் தேதி வெளீயானது.
என்ன ஆச்சரியம்? அது 1993 ஆம் ஆண்டு வெளியான க்ரெளண்ட் ஹாக் திரைப்படத்தின் முன்னோட்டத்தை அப்படியே ஒத்திருக்கிறது.
அவ்விரண்டு முன்னோட்டங்களும் இங்கே ……











