சினிமா செய்திகள்

சசி – ஹரீஷ்கல்யாண் இணையும் படத்தின் பெயர் இதுதான்

ஹரீஷ்கல்யாண் இப்போது இயக்குநர் சசி இயக்கத்தில் ஒரு படம் நடித்துள்ளார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாம்.

முழுமையாகப் படப்பிடிப்பு நிறைவடையும்வரை அப்படம் குறித்து எவ்விதத் தகவலையும் வெளியிடாமல் பாதுகாத்து வந்திருக்கின்றனர்.

இப்போது படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் அவையும் முடிவடையும் நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர்.

இப்படத்துக்கு, கும்கி படத்தில் இடம் பெற்றுப் புகழ்பெற்ற பாடலான அய்யய்யோ ஆனந்தமே என்கிற பாடலில் இடம்பெறும் நூறு கோடி வானவில் என்கிற சொல்லையே பெயராக வைத்திருக்கிறார்கள். இமான் இசையில் யுகபாரதி எழுதிய வரி இது.

நூறு கோடி வானவில் என்கிற பெயரை வைத்துப் பார்க்கும்போது, திகட்டத் திகட்ட ஒரு காதல் கதையைச் சொல்லியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

Related Posts