September 16, 2026
செய்திக் குறிப்புகள்

தம்பிக்காக ராகவா லாரன்ஸ் செய்யும் சிறப்பு

கே எஸ் ரவிக்குமார் இயக்கவுள்ள புதியபடத்தில் எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.இவர் ராகவா லாரன்சின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடியான சண்டைக்காட்சிகள், கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகள் மற்றும் மனதைத் தொடும் பாசக்காட்சிகள் நிறைந்து உருவாகவிருக்கிறது இந்தப் புதியபடம்.

தம்பி கதாநாயகனாக நடிப்பதால் இப்படத்தில் சிறப்பு வேடமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ராகவாலாரன்ஸ்.

இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்தப்படத்தை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது, ராகவா லாரன்சின் 46 ஆவது பிறந்தநாள் இன்று. அதையொட்டி இவ்வறிவிப்பு வெளியானது.

Related Posts