சினிமா செய்திகள்

தொடங்குமுன்பே சூர்யா படத்தைக் கைப்பற்றிய பெரிய நிறுவனம்

சூர்யா இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின்
முதலிரண்டு கட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்திருக்கின்றன. அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

அதற்கடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கடுத்த படமும் உறுதியாகிவிட்டதாம்.

பாண்டிராஜ், வெற்றிமாறன் ஆகியோரின் படங்களைத் தொடர்ந்து சிறுத்தைசிவா இயக்கும் புதியபடமொன்றில் சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.

அந்தப்படத்தை ஸ்டுடியோகிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அருவா என்றொரு படம் அறிவிக்கப்பட்டது. அது நடக்காமல் போய்விட்டது.

அதற்குப் பதிலாக சிறுத்தை சிவா சூர்யா இணையும் படம் உருவாகவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் இப்படத்தின் இணைய ஒளிபரப்பு உரிமையைப் பெரும் தொகை கொடுத்து சோனிலிவ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறதாம்.

ஜூன் 25 ஆம் தேதிதான் தன் முதல்படத்தை ஒளிபரப்பவிருக்கும் சோனிலிவ் நிறுவனம், அதற்குள் சூர்யா படத்தின் உரிமையைக் கைப்பற்றியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts