சினிமா செய்திகள்

தனுஷ் மீது செல்வராகவன் கலைப்புலிதாணு கோபம் – மாறிய முடிவு

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் நானே வருவேன்.இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி.கே ஆகியோர் பணிபுரிகின்றனர்.

2021 பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு வடிவமைப்பு ஆகியனவற்றை சனவரி 13 இரவு 7:10 மணிக்கு ‘நானே வருவேன்’ என்ற தலைப்புடன் அடங்கிய முதல்பார்வையை வெளியிட்டது படக்குழு.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20,2021 இல் தொடங்கும் என்று இன்று (ஜூன் 23,2021) மாலை 4 மணிக்கு அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பை தனுஷ் மற்றும் செல்வராகவன் இரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.

இந்த அறிவிப்புக்குப் பின்னால் ஒரு பெரிய கதையே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஜூன் 18 அன்று, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது முதல் நேரடித் தெலுங்கு படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்றும் அப்படம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே பல படங்கள் வரிசையில் இருக்கும்போது இந்தப்பட அறிவிப்பு இப்போது வந்தது எப்படி? இதன் படப்பிடிப்பு எப்போது? என்கிற கேள்விகளுக்கு, நானே வருவேன் படத்துக்காகக் கொடுத்த தேதிகளை இந்தப்படத்துக்கு தனுஷ் ஒதுக்கியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

இதனால், செல்வராகவனும் கலைப்புலி தாணுவும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.

அதற்கேற்றாற்போல் ஜூன் 16 அன்று செல்வராகவன் வெளியிட்ட ட்விட்டரில், ஏமாற்றங்களை சகித்துக் கொண்டால் கவலைப் பட என்ன இருக்கின்றது? என்று பதிவிட்டிருந்தார்.

அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தைகளில் முதலில் இந்தப்படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள். அதில் அவர் மாற்றம் எதுவும் செய்துவிடக்கூடாது என்பதால் அதை இன்றே அறிவித்துவிட்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts