October 25, 2021
சினிமா செய்திகள்

பிரகாஷ்ராஜை தோற்கடித்த தெலுங்கு மொழியுணர்வு

மா என்றழைக்கப்படும் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு நேற்று (அக்டோபர் 10,2021) தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு பிரகாஷ்ராஜ், விஷ்ணு மஞ்சு ஆகியோர் முதன்மைப் போட்டியாளர்களாக இருந்தனர்.

இந்தத் தேர்தலில் பிரகாஷ்ராஜ் ஆந்திராவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். கன்னட நடிகர் சங்கத்தில் அவர் போட்டியிடட்டும். இங்கே போட்டியிட அவருக்கு உரிமை இல்லை. தெலுங்குப் பட உலகைச் சேர்ந்த சிலர் அவருக்கு ஆதரவு கொடுப்பது ஏன்? என்று புரியவில்லை. அவர்கள் நினைத்தால், போட்டியே இல்லாமல் தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். அப்படி ஒருமனதாக தேர்ந்தெடுப்பதை மூத்த நடிகர்கள் விரும்பவில்லை போலும். தெலுங்கு நடிகர் சங்கத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்தவரே தலைவராக இருக்க வேண்டும் என்ற கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டன.

அந்தக் கருத்துக்குத் தெலுங்கு நடிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட விஷ்ணுமஞ்சு வெற்றி பெற்றுள்ளார். பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்துள்ளார்.

பிரகாஷ்ராஜ் தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகராக வலம்வந்தபோது அவருக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை. கலைக்கு மொழியில்லை என்று ஆதரித்தார்கள்.அதேசமயம் நிர்வாகம் பொறுப்பு என்று வரும்போது மொழியுணர்வு வந்துவிடுகிறது என்பதும் பிரகாஷ்ராஜின் தோல்வி இதற்குச் சான்றாக இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

Related Posts