சினிமா செய்திகள் நடிகை

இன்னொரு நடிகை இப்படி – ஸ்ரீரெட்டியின் தகவலால் பரபரப்பு

தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

பட வாய்ப்புத் தருவதாகக் கூறி படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டினார். அரை நிர்வாணப் போராட்டமும் நடத்தினார்.

ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் திரைப்படமாகவும் தயாராகிறது. இதில் ஸ்ரீரெட்டியும் நடிக்கிறார்.

தனது முகநூல் பக்கத்தில் பாலியல் புகார் பதிவை சிறிது நாட்கள் நிறுத்தி வைத்திருந்த ஸ்ரீரெட்டி இப்போது கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் பற்றி பதிவிட்டு அதிர வைத்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கரன் ஐதராபாத் வரும்போதெல்லாம். சார்மி’ங்கான பெண் அவரோடு தொடர்பில் இருப்பார். இவர்கள் சந்திப்புக்கு சாமுண்டேஸ்வரர் சாமி ஏற்பாடு செய்து கொடுப்பார்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

சச்சின் தெண்டுல்கரன் என்பது சச்சின் தெண்டுல்கரையும், சார்மி’ங் பெண் என்பது நடிகை சார்மியையும் குறிப்பதாக உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் சொல்லப்படுகிறது.

இதனால் ஸ்ரீரெட்டிக்கு எதிர்ப்புகளும் அதேசமயம்,ஸ்ரீ சச்சின் இப்படிப்பட்டவரா? என்கிற கருத்துகளும் வருகின்றன.

Related Posts