September 7, 2024
செய்திக் குறிப்புகள்

நாலு பேருக்கு நன்றி சொன்ன விமல் – படவா விழா தொகுப்பு

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர்.

இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

கே.வி. நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத்தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர்.

சண்டைக்காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும் வடிவமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். பாடல்களை ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘படவா’ படம் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் நிலையில், அதன் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா செப்டம்பர் 13 அன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் ஜான் பீட்டர் பேசியதாவது…

அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இந்தப் படத்தில் சூரி சார் பெரிய கேரக்டர் செய்துள்ளார். அவர் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன் என்றார்.

கவிஞர் இளையகம்பன் பேசியதாவது…

‘படவா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். என் அருமை இசையமைப்பாளர் ஜான் பீட்டர் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அவரது பெரிய முயற்சியில் உருவாகின்ற ‘படவா’ திரைப்படம் ஒரு அற்புதமான திரைச்சூழலை உருவாக்கி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை. இந்தத்திரைப்படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. அனைத்துப்பாடல்களையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்தத்திரைப்படத்தின் முகப்புப் பாடலை நான் எழுதியிருக்கின்றேன். பாடல்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக அமைந்திருக்கின்றன. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

கலை இயக்குநர் சரவண அபிராமன் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், படவா திரைப்படத்தில் நவரசங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன‌. இந்தப்படத்திற்கு இசையமைப்பாளரும் தயாரிப்பாளரும் ஜான் பீட்டர் அவர்கள் தான். விமல் மிகப்பெரிய நடிகர், இந்தத்திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், சூரி அவர்களுக்கும் இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றார்.

ஒளிப்பதிவாளர் இராமலிங்கம் பேசியதாவது…

இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் மிகவும் நன்றாக உருவாகி உள்ளது. என் உடனிருந்த அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குந‌ர் சரவணன் சக்தி பேசியதாவது…

இது மிகப்பெரிய சமூகப்பொறுப்புள்ள படம். விவசாயம் பற்றி இது பேசுகிறது. இந்தத்திரைப்படத்தைப்பொறுத்தவரை அனைவரும் சிறப்பான பங்களித்துள்ளனர். நானும் இந்தப்படத்தில் ஒரு ரோல் செய்துள்ளேன். படம் மிகப்பெரிய வெற்றிபெற எல்லாம் வ‌ல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

நடிகர் சவுந்திரராஜா பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நான் நான் நடிக்காவிட்டாலும் விமலுக்காக வந்திருக்கிறேன். விவசாயம் குறித்த‌ கருத்து இதில் இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக நன்றாக ஓட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். அனைவருக்கும் வணக்கம் என்றார்.

பாடகர் வேல்முருகன் பேசியதாவது…

இந்தத்திரைப்படத்தில் டைட்டில் பாடலை நான் பாடியிருக்கிறேன். ‘படவா’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும், மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவருடனும் சினிமாவில் பயணிப்ப‌து மிகவும் மகிழ்ச்சி என்றார்.

இயக்குந‌ர் பேரரசு பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம். ஜான் பீட்டர் இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி இசையமைப்பாளரும் தான். பாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. நடிகர் விமல் வெற்றி அடைந்துக்கொண்டே இருக்க வேண்டும். ‘படவா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் விவசாயத்தைப் பற்றியது. ‘கடைசி விவசாயி’ தேசிய விருது பெற்றது, டிரைலரை பார்க்கும் போது அது போன்ற திரைப்படமாக தான் ‘படவா’ இருக்கும் என்று தோன்றுகிறது என்றார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க‌ச்செயலாளர் கதிரேசன் பேசியதாவது……

‘படவா’ திரைப்படம் தயாரிப்பாளர் ஜான் பீட்டருக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும், விமல் அவர்களுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். படத்தில் பணியாற்றிய‌ தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

திருமதி ரதீ சங்கர் பேசியதாவது……

இந்த ப்ராஜெக்ட் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும். அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் வானம் கொட்டட்டும் என்ற பாடலை நான் பாடியுள்ளேன் என்றார்.

கதாநாயகி ஸ்ரீதா பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், மேடையில் உள்ள அனைவருக்கும் நன்றி. இயக்குந‌ர் நந்தா அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்குச் சுத்தமாகத்‌ தமிழ் தெரியாது. அவரால் தான் நான் தமிழ் வசனம் பேசி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். அனைவருக்கும் நன்றி என்றார்.

கதாநாயகன் விமல் பேசியதாவது…

மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்தத்திரைப்படத்தின் இயக்குந‌ர் நந்தா அவர்களுக்கும் நன்றி. அன்பு நண்பன் சூரி அவர்களுக்கும், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் அவர்களுக்கும் நன்றி என்றார்.

விஜய் ஆண்டனி பேசியதாவது…

ஜான் பீட்டர் மற்றும் கதாநாயகன் விமல் அவர்களுக்கு வணக்கம். கண்டிப்பாக நீங்கள் பெரிய உயரத்தைத் தொடுவீர்கள். கதாநாயகன் விமல் நடிகர் சூரி சார் காம்போ நன்றாக இருக்கும். இது நல்ல திரைப்படமாக கட்டாயம் அமையும்.

இவ்வாறு் அவர் பேசினார்.

Related Posts