விமர்சனம்

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக்குழு் – விமர்சனம்

விளையாட்டில் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்தும் படங்கள் வரிசையில் வந்திருக்கும் படம், எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு.

நாயகன் ஷரத் மற்றும் நண்பர்கள் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுக்கு முன்னாள் விளையாட்டு வீரர் மதன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார். அதன்விளைவாக இந்திய அளவில் விளையாடும் வாய்ப்பைப் பெறுகிறாரகள். அதிகாரவர்க்கம் அவர்கள் உயர்வை விரும்புமா? ஏராள தடைகள். அவற்றைக் கண்டு அஞ்சி ஒதுங்காமல் பதிலடி கொடுக்க நினைக்கிறாரகள். அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.

புதுமுகம் என்றாலும் பொருத்தமாக இருக்கிறார் நாயகன் ஷரத்.விளையாட்டு, சண்டை மட்டுமின்றி காதல் காட்சிகளிலும் இயல்பாக நடித்திருக்கிறார்.

விளையாட்டு, அரசியல் எனப்போகும் கதையில் நாயகியின் பங்கு குறைவாகத்தான் இருக்கும்.குறைந்த காட்சிகள் மற்றும் ஒரு பாடலில் கவனிக்க வைக்கிறார் நாயகி அய்ரா.

மதன்தட்சிணாமூர்த்தி, நரேன், கஞ்சாகருப்பு, முத்துவீரா,இளையராஜா.எஸ் ஆகிய நடிகர்களும் படத்தின் தன்மைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

அலிமிரஷாக்கின் இசையில் பாடல் தாளம் போடவைக்கிறது. பின்னணி இசையில் துடிப்பு.

ஒளிப்பதிவாளர் வினோத்ராஜாவின் பங்களிப்பு படத்துக்குப் பலம்.

படத்தொகுப்பாளர் கிஷோர்.எம் படக்குழுவைத் திருப்திப்படுத்த உழைத்திருக்கிறார்.

திரைக்கலையை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல் சமுதாயச் சிக்கல்களைக் காட்சிப்படுத்தி அவற்றிற்கு தீர்வு காண எண்ணும் இயக்குநர் ஹரி உத்ரா, இந்தப்படத்திலும் அதைச் செய்திருக்கிறார்.

திரைமொழிக்குப் பங்கமில்லாமல் அதைச் செய்திருப்பதால் அனைவரும் இரசித்துப் பார்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

– குமரன்

Related Posts