சிம்பு நடிப்பில் பிப்ரவரி 1,2019 அன்று வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இயக்குநர்களின் ஊடகமான திரைத்துறையில் இயக்குநர் நடிகர் ஆகியோரைத் தாண்டி படத்துக்கு முதலீடு செய்யும் தயாரிப்பாளர் சிறப்புப் பெறுகிறாரென்றால் அவர் செய்யும் செலவுக்காக அல்ல. அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்காகவே சிறப்புப்பெறுவார். அப்படி நல்ல கதைகளைத் தேடிப் படமாக்கும் சில தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர்தான் பி.மதன். பொறியியல் பட்டதாரி, கலை மீது காதல் கொண்ட அவர், கல்லூரித்
2012 அக்டோபர் 12 ஆம் தேதி எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளீயான படம் பீட்சா. வெளியான நாள் முதலே பெரிதும் கவனம் ஈர்த்தது அந்தப்படம். இன்றைக்குப் புகழ்பெற்றிருக்கும் விஜய்சேதுபதி அந்தப்படத்தின் நாயகன், ரஜினியின் பேட்ட பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முதல்படம் அது. அந்தப்படத்தின் சிறந்த வெற்றி கார்த்திக்சுப்புராஜை பெரிய இயக்குநர் ஆக்கிவிட்டது. தமிழ்த்திரையுலகுக்குப்
சிவகார்த்திகேயன், ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, படங்களைத் தயாரித்து வருகிறார். அவருடைய தயாரிப்பில் முதல் படமாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘கனா’ படம் உருவானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக முன்னணியில் இருக்கும் ரியோ நாயகனாக
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரண்டு படங்களுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் படம் “சிந்துபாத்”. பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்திற்குப் பிறகு வேறுபட்ட கதைக்களத்தில் சேதுபதி திரைப்படத்தை இயக்கியதைப் போல தனது மூன்றாவது படமான சிந்துபாத்தில் முற்றிலும் வேறுபட்ட புதிய கதைக்களத்தைத் தொட்டுள்ளார்.
அனிதாஉதீப் இயக்கத்தில் ஓவியா நாயகியாக நடித்துள்ள 90 எம்எல் படத்தில் துடிதுடிப்புடன் ரவுடி என்ற வேடத்தில் நடித்திருந்த இளைஞர் பெயர் தேஜ்ராஜ். தேஜ்ராஜ் வேறு யாருமில்லை.பிரபல நடிகரான சரண்ராஜின் மகன் தான் இவர். அப்பாவின் அடையாளத்தை வெளிக் காட்டாமல் நடித்து இன்று வெள்ளித்திரையில் தானும் ஜொலிக்க முடியும்.ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறார். அவரிடம்
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘காப்பான்’. இந்தப் படத்தில், மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.நாயகியாக ஆர்யா மனைவி சாயிஷா நடித்துள்ளார். இந்தப் படத்தில் மோகன்லால் இந்தியாவின் பிரதமராகவும், அவரின் பாதுகாப்புக்கு இருக்கும் உயர் காவல் அதிகாரியாக சூர்யாவும் நடிக்கின்றனர் என ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில்,
வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர் போன்ற பல கவனிக்கத் தக்க படங்களைக் கொடுத்தவர் சுசீந்திரன். இவர் சமீபத்தில் அஜித்தை அரசியலுக்கு வரச்சொல்லி கருத்து ஒன்றைப் பதிவு செய்திருந்தார். இந்த டீவீட்டை வைத்து சிம்புவின் தம்பியான குறளரசன் அஜித்தை கேலி செய்துள்ளார். மேலும் எங்கப்பன்தான்யா அடுத்த முதல்வர் என்றும் கூறியுள்ளார். தீபா பேரவையுடன் சேர்ந்து லட்சிய திமுக 234
திண்டிவனம் பக்கத்தில் அனந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் எல்லா வேலைகளையும் பார்ப்பவராக இருக்கிறார் கிஷோர் ரவிச்சந்திரன். அவருக்கு உறுதுணையாக தம்பி ராமையா இருக்கிறார். அந்தக் கோவிலில் இரவு நேரங்களில் யாரோ சிலர் நடமாடுவதைக் கவனித்து கிஷோர் இரவு நேரங்களில் கூடுதலான கவனத்துடன் காவல் காக்கிறார். ஒரு நாள் இரவில் அப்படி வந்து போனவர்களில் ஒருவர் யார் என்று
ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் கிருஷ்ணம். அறிவியல் எவ்வளவு வளர்ந்திருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட கடவுள் நம்பிக்கை பெரிது என்று சொல்லியிருக்கிறார்கள். நாயகன் அக்ஷய் கிருஷ்ணா பணக்கார வீட்டுப் பையன். அன்பான பெற்றோர் அளவுக்கதிகமான வசதி, நல்ல கல்லூரியில் படிப்பு என்று இருக்கும் அவருக்கு அதே கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்.




















