எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியானது. வெளிவருமுன்பே பரவலான வரவேற்பு விமர்சனங்களை அப்படம் பெற்றிருந்தது. பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்களையும் குற்றங்களையும் கடுமையாக எதிர்க்கக் கூடிய கருத்து கொண்ட படமாக இருந்ததால் திரையுலகினர் பலரும்
ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா உட்பட பலர் நடித்திருந்த படம் இந்தியன். 1996 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின் அப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஷங்கர். காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார்.
பிரபுதேவா நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பொன்மாணிக்கவேல்.இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.அவரிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய ஏ.சி.முகில்செல்லப்பன் இயக்குகிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சுரேஷ் மேனன், பிரபு, கு.ஞானசம்பந்தன், மகேந்திரன் ஆகியோர்
நடிகர் ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.துருவங்கள் 16 அதற்கு ஒரு சாட்சி. அவர் தற்போது வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்து வரும் திரைப்படம், “ஆபரேஷன் அரபைமா”.கதையின் நாயகியாக “நாடோடிகள்”அபிநயா நடித்திருக்கிறார். இவர்களோடு டினி டாம், கௌரி லஷ்மி ஷிஹாத், அரவிந்த் கலாதர், சஜி சுரேந்திரன், நேகா சக்சேனா, சாம்சன் டி.வில்சன், அனூப் சந்திரன்,
இசை அமைப்பாளராக வெயில் படத்தில் அறிமுமாகி தமிழில் பல்வேறு படங்களில் வெற்றிகரமான பாடல்களையும் அசத்தலான பின்னணி இசையையும் வழங்கியவர் ஜி.வி பிரகாஷ். தற்போது நடிகராகவும் பயணித்து வருகிறார். நாச்சியார், சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட வேடங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜி.வி.பிரகாஷ். அவரின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக Provoke magazine சிறந்த
சிம்பு நடிப்பதாகச் சொல்லப்பட்ட மாநாடு படம் கைவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில்….. வணக்கம்… நான் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.. மிக மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அன்புத் தம்பி சிம்பு அவர்கள் ஒரு பெரிய பொறுப்பை கொடுத்தார். தன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை
ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரங் ஆகிய மூன்று இளம்பெண்களும் ஒன்றாக ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். ஆளுக்கொரு வேலைக்குப் போகிறார்கள். மூவருக்கும் பெரிய இடத்துப் பையன்களால் திடீர் சிக்கல் ஏற்படுகிறது. அவர்கள் இப்பெண்களுக்கு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறையத் தொல்லைகள் கொடுக்கிறார்கள். அவற்றிலிருந்து அவர்கள் மீண்டார்களா? அப்பெண்களுக்கு அஜீத் உதவுகிறார்.
ஜெயம்ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் கோமாளி. இந்தப்படம் ஆகஸ்ட் 15 ஆம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் 16 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்து மீள்பவராக ஜெயம்ரவி நடித்திருக்கிறார் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது. மிகவும் சுவாரசியமான திரைக்கதை என்பதால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கையாக
நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். அதன்மூலம் தன் கருத்துகளை மட்டும் சொல்லிவிட்டுப் போய்விடாமல், ரசிகர்களுடன் உரையாடவும் செய்பவர். அவர் தற்போது எழுதி இயக்கியிருக்கும் ஒத்த செருப்பு 7 என்கிற படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலையில், அணைப்பிற்கு அழைப்பு! ரசிகர்களின்
2014 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகியிருக்கிறது.நான்கு மொழிகளிலும் மீடியண்ட் பிலிம் சார்பாக மனுகுமரன் தயாரித்துள்ளார். தமிழில் தயாராகியிருக்கும் பாரிஸ் பாரிஸ் படத்தை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கிறார்.தமிழில் வசனங்களை திமுக பாராளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான




















