காஞ்சிபுரம் – விஜய் மன்ற அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த திரைப்பட இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் அளித்த பேட்டி…. அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை – மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருவதால் அரசியலை வியாபாரமாகச் செய்யாதீர்கள், அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவசப் பொருட்கள்
எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன் சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அழுத்தமான கதைக்களத்தோடு பொழுதுபோக்கு அம்சங்களும் கலந்து உருவாகி வரும் லாபம் படத்தின் முதல்பார்வை நேற்று (சனவரி 11)
தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் தனது அடுத்த கதைக்கு தேர்ந்தெடுத்திருக்கும் நாயகன் சூர்யா. சூர்யாவுக்கு இது நாற்பதாவது படம். பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாகக் கொண்டு அசுரன் திரைப்படம் உருவானது. இந்நிலையில், நேற்று திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன்,
ரஜினிகாந்த் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான அன்றே சில மணிநேரங்களில் இணையத்தில் சட்டவிரோதமாக தர்பார் படம் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. தற்போது, தர்பார் படத்துக்கு மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. அதாவது, இணையத்தில் வெளியான தர்பார் படம் வாட்ஸ் அப்களில் 3 பாகங்களாகப் பிரித்து பகிரப்பட்டு
2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் உருவானது. எஸ்.ஆர்.பிரபு தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நாயகி இல்லை, பாடல் இல்லை, ஒரே இரவில் நடக்கும் கதை போன்ற வித்தியாசமான அம்சங்களுடன் இந்தப் படம் உருவானது. இந்தப்
ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் மரியமிக்கேல் என்பவர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நேற்று ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘தர்பார் படத்தில் சீருடைப் பணியாளர்களின்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் இன்று (சனவரி 9, வியாழக்கிழமை) திரையரங்குகளில் வெளியானது. இன்று அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் தர்பார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி 24 மணிநேரம் கூட முடியாத நிலையில், முழுத் திரைப்படமும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் பலர் தர்பார்
மும்பையில் 17 காவல்துறையினரை உயிரோடு எரித்துக் கொன்று விடுகிறார் ஒரு தாதா. அதனால் மும்பையில் காவல்துறை வேலைக்கு வரவே பலரும் அச்சப்படுகிறார்கள். அந்த பயத்தைப் போக்கி மீண்டும் காவல்துறைக்கு மரியாதை ஏற்படுத்தித் தர மும்பை மாநகரக் காவல் ஆணையராகப் பொறுப்பேற்கிறார் ரஜினிகாந்த். அவர் மும்பை வந்ததும் தொடங்குகிற அதிரடி அட்டகாசங்கள் படம் முடியும்வரை தொடருகின்றன. காவல்துறை
பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டுடைமையாக்கப் பட்ட இந்த நாவலைப் திரைப்படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோர் முயன்றார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கியுள்ளார். இந்த நேரத்தில் பொன்னியின் செல்வனை இணையதள தொடராக எடுக்கும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் மே 6
விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் அடுத்து கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள அந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் அப்பா மகன் ஆகிய இருவேடங்களில் அவர் நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு




















