மறைந்த முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்து வருகிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், செயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து,
முன்பெல்லாம் ஒரு படம் வெளிவந்தவுடன் இந்தக்கதை என்னுடையது என்கிற குற்றச்சாட்டுகள் வந்தன. அதன்பின் படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது வெளியாகும் செய்திகளையொட்டி கதைத்திருட்டுக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இப்போதெல்லாம் ஒரு படம் அறிவிக்கும்போதே அம்மாதிரியான குற்றச்சாட்டுகள் வரத்தொடங்கியிருக்கின்றன. இப்போது, குற்றச்சாட்டாக இல்லாமல் ஒரு விசயம் திரையுலகில் குறிப்பாக உதவி
வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் படம் விடுதலை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்றது. இப்படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வையை அண்மையில் வெளியிட்டனர். இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இளையராஜா உடன் கை கோத்துள்ளார்
ஏப்ரல் 23,2021 அன்று நடிகர் தனுஷ் வெளீயிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கர்ணன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நானும் மாரி செல்வராஜும் மீண்டும் ஒருமுறை இணைகிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறியுள்ளார். தனுஷ் இப்போது தி க்ரே மேன் என்கிற ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தைன் கடந்த ஆண்டு நவம்பர் 14 தீபாவளி நாளில் வெளியானது. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிக்கும் அந்தப்படத்தின் பெயர், முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியன இன்று வெளியாகியுள்ளது. படத்துக்கு சர்தார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். படத்தில் சுல்தான் பட நாயகி ராஷ்மிகா மந்தனா மற்றும் கர்ணன் பட நாயகி
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்துவருகிறது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறது படக்குழு. அடுத்து சென்னையிலேயே சுமார் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக சென்னையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறதாம். ஒரு மிகப்பெரிய
தனுஷ் இப்போது தி க்ரே மேன் என்கிற ஆங்கிலப்படத்தில் நடிப்பதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்திக்நரேன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அதற்கடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்கிற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு முன்பே ராட்சசன் இயக்குநர் ராம்குமார்
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக் கொடூரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக ஒரு நாயகன், அந்தக் கொடூரங்களை நிகழ்த்தியவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார் என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் பாப்பிலோன். நாயகன் ஆறு.ராஜா தாடியுடன் இருப்பது வசனங்கள் உச்சரிப்பது ஆகியனவற்றால் பழைய டி.ராஜேந்தரை நினைவு படுத்துகிறார். சில இடங்களில் பொருத்தமாகவும் சில இடங்களில்
1992 இல் வெளியான கே.பாலச்சந்தரின் வானமே எல்லை திரைப்படத்தின் மூலம் நடிகரானவர் தாமு. அதன்பின் இருபது ஆண்டுகள் முழுநேர நகைச்சுவை நடிகராக ஏராளமான படங்களில் நடித்தார். திடீரென அவரைத் திரைப்படங்களில் காணமுடியவில்லை. அதற்கு என்ன காரணம்? என்பதைப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் அவரே வெளிப்படுத்தியிருக்கிறார். திரைப்படங்களில் இருந்து விலகி கடந்த பத்து ஆண்டுகளாக, நடிகர் தாமு கல்விச்சேவை
இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் சங்கர் பிற படங்களை இயக்கத் தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குநர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,





















