அழகு என்றால் ஆபத்து என்று மனதில் ஆழமாகப் பதிந்த ஓர் இளைஞனின் விபரீத சிந்தனையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஓர் உளவியல் மருத்துவரின் அணுகுமுறையோடும் அக்கறையோடும் பேசியிருக்கும் படம் பியூட்டி. அப்பா மகன் என இருவேடங்களில் நடித்திருக்கிறார் நாயகன் ரிஷி. உளச்சிக்கல் உடையவர் வேடத்துக்கு
சிம்பு நடித்துள்ள பத்துதல படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படத்துக்கு அடுத்து சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6.30 க்கு வெளியாகியிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி, சிம்புவின் 48 ஆவது படமான அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.அந்நிறுவனம் சார்பாக கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் ஆகியோர்
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘விடுதலை’. இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (08.03.2023) நடைபெற்றது. இளையராஜாவின் பாடல்களோடு விழா தொடங்கியது. அதன்பின்
’96’, ’ரோமியோ ஜூலியட்’, ’கலாப காதலன்’ போன்ற குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்களை மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அந்நிறுவனம், அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மேன்’ படத்தைத் தயாரித்து வருகிறது. இகோர் (’கலாபக்காதலன்’ படப்புகழ்) இயக்கி வரும் இப்படத்தில் ஆரி அர்ஜுனன் முதல்முறையாக வில்லனாக
பி.நடராஜன் வழங்கும் ஆபரேஷன் அரபைமா படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்படை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் 07.03.2023 அன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பிராஷ் பேசும்போது…… நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக
தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது செயலாளராக இருக்கும் மன்னன் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.அவர் போட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் நடத்தத் தடை இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், தேர்தல் தாமதமாகிறது. தேர்தல் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார் தயா்ரிப்பில் கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான படம் சர்தார். இயக்குநர் பி.எஸ்.மிதரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டைவேடங்களில் நடித்திருந்தார்.ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப்படத்தின் இணையதள ஒளிபரப்பு உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றிருந்தது. அதற்காக அந்நிறுவனம் கொடுப்பதாக
புதுஇயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள அயோத்தி படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் அப்படத்தின் கதை குறித்த சர்ச்சையும் எழுந்துள்ளது. எழுத்தாளர் மாதவராஜ், 2011 ஆம் ஆண்டு நடந்த ஓர் உண்மை நிகழ்வை அழக்கூடத்திராணியற்றவர்கள் என்ற பெயரில் பதிவு செய்திருந்தார். அந்நிகழ்வை அப்படியே எடுத்துக்கொண்டு அதை என் கதை என்று
அயோத்தி படக்கதை குறித்த சர்ச்சை நீள்கிறது. இது தொடர்பாக எழுத்தாளர் மாதவராஜின் அடுத்த பதிவு….. அயோத்தி படம் நேற்று பார்த்து விட்டேன். தீராத பக்கங்களில் – 2011ல் எழுதியதுதான் மூலக்கதை. அப்படியே இருக்கிறது. திரைக்கதையில் மாற்றம் செய்திருக்கிறார்கள். பெயர்களில் மாற்றங்கள் இருக்கின்றன. பீகாரில் இருந்து வந்தவர்களாக குறிப்பிட்டு இருந்தேன். அதை அயோத்தியாக மாற்றி
ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயிண்ட்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் திரைப்படம் ‘அகிலன்’. இந்தப்படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்தப்படத்தில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி.இவற்றில் ஒரு கதாபாத்திரம் கடற்படை அதிகாரி கதாபாத்திரம்.





















