ஏழாண்டுகளுக்குப் பிறகு வரும் அல்போன்ஸ்புத்திரன் – கோல்டு பட விவரங்கள்
2013 ஆம் ஆண்டு வெளியான நேரம், 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் ஆகிய இரு மாபெரும் வெற்றிப் படங்களுக்குப் பிறகு ஏழாண்டுகள் கழித்து அப்படங்களின் இயக்குநர் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் கோல்டு.
மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர்.அஜ்மல் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார்.
இவர்கள் தவிர தமிழகத்துக்கு நன்கு அறிமுகமான செம்பன் வினோத் உட்பட பல நடிகர்கள் படத்தில் இருக்கின்றனர்.
ஆனந்த் சி.சந்திரன், விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.
இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேநாளில் தமிழிலும் இப்படம் வெளியாகவிருக்கிறது.
சிம்புவின் மாநாடு படத்தை வெளியிட்ட கோவை சுப்பையா இந்தப்படத்தையும் தமிழில் வெளியிடுகிறார்.
அதற்காக அவர் கொடுத்திருக்கும் விலை சுமார் ஒரு கோடி என்று சொல்லப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருக்கும் படம் பிரித்விராஜ், நயன்தாரா உள்ளிட்ட நடிகர்கள் ஆகியன மட்டுமின்றி செப்டம்பர் எட்டாம் தேதி சென்னையிலும் அரசுவிடுமுறை அறிவித்துள்ளது ஆகியன இப்படத்துக்குப் பலம் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.










