September 23, 2023
சினிமா செய்திகள்

சூரிக்கு நேர்ந்தது கருணாஸுக்கும் நடந்தது – ஒரு சோகக்கதை

கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கிய சரவணன் இப்போது ஒரு புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது. 

இப்போதுதான் சசிகுமார் நாயகன், படம் தொடங்கும்போது படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கருணாஸ். அவரை வைத்துச் சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

அதன்பின், ஒரு முக்கியவேடத்தில் சில நாட்கள் மட்டும் நடிக்கிற மாதிரி ஒரு வேடம் இருக்கிறது என்று சொல்லி சசிகுமாரை உள்ளே கொண்டுவந்திருக்கிறார்கள்.

அதன்பின், கொஞ்சம் கொஞ்சமாக சசிகுமாரின் வேடத்தைப் பெரிதுபடுத்தி அவரே கதாநாயகன் என்கிற மாதிரி ஆக்கிவிட்டார்களாம்.

அப்படின்னா கருணாஸ் நிலை?

நீங்களும் ஒரு பாத்திரத்தில் நடிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். 

இதனால் கடுப்பான கருணாஸ், இந்தப்படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை நான் விலகிக் கொள்கிறேன் என்று சொல்லி விலகி வந்துவிட்டாராம்.

இப்போது சசிகுமாரை வைத்தே படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.

ஏற்கெனவே, வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் சூரியைக் கதாநாயகன் என்று சொல்லி அழைத்துப் போனார்கள். அதன்பின் கவுரவ வேடத்தில் நடிக்க வந்த விஜய்சேதுபதியே அதில் நாயகனாகிவிட்டார்.

அந்தப்படத்தில் சூரிக்கு நேர்ந்த சோகம் சரவணன் படத்தில் கருணாசுக்கு ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts