சினிமா செய்திகள்

தாமதமாகும் மாவீரன் தடுமாறும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார்.2023 ஆம் ஆண்டுப்பிறப்பையொட்டி நேற்று இப்படத்தின் சிறப்புப்பார்வை வெளியிடப்பட்டது.அதில், வீரமே ஜெயம் என்கிற வாசகத்துடன் சிவகார்த்திகேயன் இடம்பெற்றிருக்கிறார்.

இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அப்போதே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்றும் சொன்னார்கள்.

அதனால், இப்படத்துக்கு அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பை 2022 நவம்பர் மாதத்திலேயே தொடங்கத் திட்டமிட்டார்கள்.

ஆனால், நினைத்தபடி மாவீரன் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. கதை மற்றும் காட்சியமைப்புகளில் மாற்றம் செய்யவேண்டும் என்கிற கருத்துவேறுபாடுகள் காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டு தாமதமானதாகச் சொல்லப்படுகிறது.

மொத்தம் எண்பத்தைந்து நாட்களில் மொத்தப்ப்படப்பிடிப்பும் நிறைவு செய்யப்படும் என்று சொல்லித்தான் படத்தைத் தொடங்கினார்கள்.

இதுவரை சுமார் அறுபதுநாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்துள்ளதாம். ஆனால் பாதிப்படம் கூட உருவாகவில்லை என்கிறார்கள்.

இதனால் இன்னும் அறுபது நாட்களுக்கு மேல் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும் என்கிற நிலை தற்போது இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதனால் 2022 நவம்பரில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்ட அடுத்த படம் இன்னும் தள்ளிப்போகிறது.

மாவீரன் படத்தின் எதிர்பாராத தாமதத்தால் திட்டமிட்ட எல்லா விசயங்களும் மாறிப்போனதில் தடுமாறிப்போயிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

Related Posts