ஊரடங்குக் காலத்தில் முழுப் படப்பிடிப்பை முடித்த இயக்குநர்
2014 ஆம் ஆண்டு வெளியான திருடன் போலிஸ், 2017 இல் வெளியான உள்குத்து உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் கார்த்திக்ராஜு.
இவர் கொரோனா ஊரடங்குக் காலத்தில் சத்தமின்றி ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளாராம்.
கதாநாயகியை மையப்படுத்திய ஒரு பேய்க்கதை என்பதால் மிகக்குறைந்த ஊழியர்களுடன் முப்பது நாட்களுக்குள் மொத்தப்படப்பிடிப்பையும் நடத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
திண்டுக்கல் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்களாம். கதாநாயகியை மையப்படுத்திய படம் என்பதால் பிக்பாஸ் நிகழ்வில் பங்கேற்ற ரைசாவில்சன் நாயகியாக நடித்திருக்கிறாராம்.
இப்படத்துக்கு பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறாராம்.
குறைந்த ஊழியர்கள், குறைந்த நாட்களில் ஒருபடத்தை எடுத்துமுடித்திருப்பது உதவி இயக்குநர்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படுகிறது.











