சினிமா செய்திகள்

அஜீத்திடம் உதவி வேண்டிய துணைநடிகர் – ராகவா லாரன்ஸ் செய்த உதவி

ரேணிகுண்டா, அஜீத் நடித்த பில்லா 2 உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் தீப்பெட்டி கணேசன். இவரது இயற்பெயர் கார்த்திக்.

கொரோனா ஊரடங்கால் இவர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமலிருக்கிறார். இந்நிலையில்,அவர் வெளியிட்ட காணொலியில்,கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன் குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம் கூடக் கட்ட முடியவில்லை. தல அஜீத் உதவி செய்ய வேண்டும்,அவரைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றேன் ஆனால் முடியவில்லை, எல்லோரும் என்னை தீப்பெட்டி கணேசன் என்று கூப்பிடும்போது கார்த்தி என்று என் சொந்தப் பெய்ரில் கூப்பிடுபவர் அவர் மட்டும்தான்.எனவே என் வேண்டுகோளை அவருக்குத் தெரியப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் என உருக்கமாகப் பேசியிருந்தார்.

இதை நடிகர் ராகவா லாரன்ஸ் கவனத்துக்கு அஜீத் ரசிகர் ஒருவர் கொண்டுவந்தார். அதை தன் பக்கத்தில் பகிர்ந்த ராகவா லாரன்ஸ், தீப்பெட்டி கணேசனுக்கு ஆறுதல் கூறியதோடு குழந்தைகள் படிப்பு செலவைத் தான் ஏற்பதாகவும் அஜீத்திடம் உதவி பெற்றுத் தர ஏற்பாடு செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

Related Posts