விஜய் 67 படப்பிடிப்பு எப்போது? எங்கே? – விவரங்கள்
நம்பர் ஒன் நடிகர் யார்? என்கிற விவாதங்கள் சூடு பறந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட விஜய் அடுத்தபட வேலைகளில் தீவிரமாக இருக்கிறார்.
டிசம்பர் 24 அன்று வாரிசு படத்தின் இசைவெளியீட்டுவிழா பெரிய அளவில் நடைபெறவிருக்கிறது.அதோடு தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் வாரிசு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்துவதெனவும் அவற்றில் விஜய் கலந்து கொள்வதெனவும் முடிவு செய்யப்பட்டிருந்ததாம்.
இப்போது அத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சென்னையில் நடக்கும் இசைவெளியீட்டுவிழா நிகழ்ச்சியை முடித்துவிட்டு உடனே இலண்டன் கிளம்பிச் செல்லவிருக்கிறாராம் விஜய். குடும்பத்துடன் கிறிஸ்மஸ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு சனவரி முதல்வாரத்தில் திரும்பவரவிருக்கிறாராம்.
வந்தவுடன் சென்னையில் 7 ஸ்கிரீன்ஸ்டுடியோ லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கும் விஜய் 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கவிருக்கிறதாம். சுமார் பத்துநாட்கள் சென்னை படப்பிடிப்பு முடிந்தவுடன் ஓர் இடைவெளி.
அதன்பின் விஜய் 67 படக்குழு வடமாநிலம் செல்லவிருக்கிறதாம். காஷ்மீர்,லடாக் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஐம்பதுநாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம்.
துப்பாக்கி படத்துக்குப் பிறகு அதிகநாட்கள் வடமாநிலங்களில் நடைபெறவிருக்கும் விஜய் படத்தின் படப்பிடிப்பு இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.












