நடிகர் விஷாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுவிட்டார்.இந்தத் தகவலை அவரே வெளியிட்டார். அதன்பின் கொரோனாவிலிருந்து மீண்டது தொடர்பாக காணொலி பதிவொன்றை வெளியிட்டுள்ளார் விஷால். அதில் அவர் கூறியிருப்பதாவது…… ஒரு கெட்ட நேரத்தில் இக்கட்டான சூழலில் இருந்து எப்படி மீண்டு வந்தோம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில், ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிக்கலில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால் விசாரணை நல்ல முறையில் போய்க்கொண்டிருப்பதாகப் பலரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில்,சாத்தான்குளம் படுகொலை தொடர்பாக பாடகி சுசித்ரா ஆங்கிலக் காணொலி ஒன்றை ஜூன் 25 ஆம் தேதி
ரேணிகுண்டா, அஜீத் நடித்த பில்லா 2 உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் தீப்பெட்டி கணேசன். இவரது இயற்பெயர் கார்த்திக். கொரோனா ஊரடங்கால் இவர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமலிருக்கிறார். இந்நிலையில்,அவர் வெளியிட்ட காணொலியில்,கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன் குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம் கூடக் கட்ட முடியவில்லை.
வெளிநாடு வாழ் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவித்து ட்விட்டரில் காணொலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதில் அவர் கூறியிருப்பதாவது…. வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். கொரோனா வைரசால் முழு உலகமும் பாதிப்படைந்துள்ளது. இதற்கு இந்தியாவோ, தமிழ்நாடோ விதி
நடிகை அமலாபால் அண்மையில் பாடகர் பவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லப்பட்டது. அத்தகவல் இன்றுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில்,அமலாபால் ஒரு காணொலியை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தனது தாயுடன் கேரளாவில் உள்ள அவரது வீட்டில் கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்தைக் கழித்துவருவது தெரிகிறது. அவர் வெளியிட்டுள்ள காணொலியில், மழை தூறல் வருகிறது தூறல்
















