October 17, 2026
சினிமா செய்திகள்

சுசித்ராவுக்கு ஆபத்து – துணை நிற்க வேண்டுகோள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில், ஜெயராஜ்,பென்னிக்ஸ் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிக்கலில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதனால் விசாரணை நல்ல முறையில் போய்க்கொண்டிருப்பதாகப் பலரும் வரவேற்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில்,சாத்தான்குளம் படுகொலை தொடர்பாக பாடகி சுசித்ரா ஆங்கிலக் காணொலி ஒன்றை ஜூன் 25 ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.அது தமிழகம் தாண்டி மிகவும் கவனம் ஈர்த்தது.இந்திய அளவில் மத்திய தரவர்க்கத்தின் கவனம் சாத்தான்குளம் பக்கம் திரும்ப அவரது காணொலி ஒரு காரணம் என்னும் நிலையில் இப்போது அவர் அதிமுகவினரால் மிரட்டப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது. அவரது உயிருக்கு ஆபத்தும் உருவாகியிருக்கிறது என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் பதிவிடப்படுகிறது.

தொடர்ந்தும் அவர் சாத்தான்குளம் படுகொலைகள் தொடர்பாகப் பதிவிட்டுவருவதால் அவருக்குச் சிக்கல் என்றும் சொல்கிறார்கள்.

இதனால்,பாடகி சுசித்ராவுக்குத் துணை நிற்போம் என்கிற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன,

Related Posts