சினிமா செய்திகள்

ஆதித்ய வர்மா படத்தின் புது ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விக்ரம் மகன், த்ருவ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ஆதித்ய வர்மா. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற அர்ஜுன்ரெட்டி படத்தின் தமிழாக்கமான இந்தப் படத்தை கிரிசாயா இயக்கியுள்ளார்.

பாலிவுட் நடிகை பனிடா சந்து, ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆதித்ய வர்மா படம் வரும் 8 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக கேரளா சென்று வந்தது படக்குழு. மகனுக்காக நடிகர் விக்ரமும் அந்தப்பயணத்தில் இணைந்திருந்தார்.

இந்நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தப்படம் தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. நவம்பர் 21 ஆம் தேதி படம் வெளியாகும். உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதமாக படம் இருக்கும் என்று கூறியுள்ளது.

Related Posts