ரஜினிக்கு கமல் மோகன்லால் சல்மான்கான் உதவி
விஜய் நடித்த சர்கார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் அதற்குப் பிறகான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தின் தீம் மியூசிக் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை (நவம்பர் 7)வெளியாக உள்ளது.
இந்நிலையில் மோஷன் போஸ்டரை வெளியிடும் பிரபலங்களை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார். மலையாள போஸ்டரை நடிகர் மோகன்லாலும், இந்தியில் நடிகர் சல்மான் கானும் வெளியிடுகின்றனர்.
தங்கள் படச் செய்திகளை ரஜினி வெளியிட்டால் விளம்பரம் கிடைக்கும் எனப்பலர் நினைத்ததால், இதுவரை மற்றவர் படங்களை ரஜினி வெளியிடுவார்.இப்போது ரஜினி பட விளம்பரத்துக்கு மற்றவர்கள் பயன்படுகின்றனர்.











