சினிமா செய்திகள்

மருத்துவமனையில் விக்னேஷ்சிவன் கலங்கிய நயன்தாரா

இயக்குநர் விக்னேஷ்சிவனும் நடிகை நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்கின்றனர் என்று திரையுலகம் முழுமையும் சொல்கிறது. 

ஆனால் அவர்கள் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேநேரம் அதுகுறித்து வருகிற செய்திகளையும் மறுப்பதில்லை.

ஏற்கெனவே நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ்சிவன் இப்போது, நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தைத் தயாரித்து வருகிறார்.

அண்மையில் விக்னேஷ்சிவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம்.

அவர் மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவர் கூடவே இருந்து பணிவிடை செய்திருக்கிறார் நயன்தாரா.

விக்னேஷ்சிவனின் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டு சோகத்துடன் நயன்தாரா அமர்ந்திருந்த காட்சியைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் வியப்படைந்திருக்கிறார்கள்.

இந்த மருத்துவமனையில் நாள்தோறும் எவ்வளவோ கணவன் மனைவியர் அனுமதிக்கப்படுகின்றனர். யாரும் இவ்வளவு அன்னியோன்யமாக இருந்து பார்த்ததில்லை என்று சொல்கிறார்கள்.

Related Posts