கடிதத்தைக் கிழித்துப் போட்ட கலாநிதிமாறன் – சன் பிக்சர்ஸ் பரபரப்பு
ரஜினியின் எந்திரன், விஜய்யின் சர்கார் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்து,தமிழகத்தின் முக்கியமான திரைப்படத் நிறுவனமாகத் திகழ்வது சன் பிக்சர்ஸ்.
அந்நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தைத் தயாரித்திருக்கிறது.
அப்படம் இம்மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தொடங்கிய நேரத்தில் அதன் பொறுப்பாளராக இருந்தவர் சக்சேனா.
அவர் வெளியேற்றப்பட்ட பின்பு அதற்குப் பொறுப்பாளராக வந்தவர் செம்பியன். இவர் மறைந்த தயாரிப்பாளர் கோவை செழியனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அணமையில் அந்தப் பொருப்பிலிருந்து விலகிக் கொள்வதாகக் கடிதம் கொடுத்தாராம்.
அதை ஏற்றுக்கொண்ட காவேரி கலாநிதிமாறன், நம்ம வீட்டுப் பிள்ளை படம் வெளியக்கும் வரை இருந்து அதன் கணக்கு வழக்குகளை முடித்துவிட்டுச் செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.
அதன்பின், இவ்விசயம் பற்றி அறிந்த கலாநிதிமாறன், செம்பியனை அழைத்து, நீங்கள் விலகக்கூடாது என்று சொல்லி பதவி விலகல் கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
இதனால் சன் பிக்சர்ஸ் நிர்வாகப் பொறுப்பில் செம்பியனே தொடர்வார் என்கிறார்கள்.
இது தொடருமா? இந்த நிலை மாறுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.











