October 16, 2026
செய்திக் குறிப்புகள்

விஜய்சேதுபதி படத்தில் அனிருத்

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், விஜயின் பைரவா உட்பட 60 க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்த பட நிறுவனம் பி.நாகிரெட்டியின் விஜயா புரொடக்‌ஷன்ஸ்.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்து வரும் படம் சங்கத்தமிழன். இந்தப் படத்தை இயக்குநர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.இவர்களுடன் நாசர்,சூரி,ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன்,மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீமன் , ஸ்ரீ ரஞ்ஜனி, மைம் கோபி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது

அதனைத் தொடர்ந்து சங்கத்தமிழன் படத்தில் விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே ஆகியோர் குரலில் கு.கார்த்திக் வரிகளில் வெளியான “கமலா ” எனும் முதல் பாடல் படித்திற்கான எதிர்பார்ப்பை மேலும் தூண்டியது.

மேலும் இப்படத்தில் பிரான்சிஸ் எழுதிய “சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான்” என்ற பாடலை அனிரூத் பாடியுள்ளார்.இந்தப் பாடல் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

Related Posts