அஜீத் பட தயாரிப்பாளருக்கு புதிய சிக்கல்
கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பதாய் ஹோ. இப்படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளின் ரீமேக் உரிமையையும் போனிகபூர் வாங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
தன்னுடைய காதலை வீட்டில் சொல்ல வரும் போது, 50 வயதைக் கடந்த தாய் கருவுற்றிருப்பதாக தெரிய வந்ததால், அவனது திருமணத்தில் ஏற்படும் குழப்பமும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த செய்தியை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதே பதாய் ஹோ படத்தின் கதை. கதை சிக்கலாக இருந்தாலும், நகைச்சுவையாக கொண்டு சென்ற விதம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தப்படம் தொண்ணூறுகளில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பவித்ரம் என்கிற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாம்.
பதாய்ஹோ படத்தைத் தாமதமாகப் பார்த்த பவித்ரம் குழு, அப்படத்துக்கான உரிமை தங்களுக்கு வேண்டும் என்று நீதிமன்றம் சென்றதாம்.
நீதிமன்றத்தில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அப்படத்தின் மொழிமாற்று உரிமையை அஜீத்தின் நேர்கொண்டபார்வை படத்தை தயாரிக்கும் போனிகபூர் வாங்கியிருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன.
இந்தத் தகவலறிந்த பவித்ரம் குழுவினர் எங்களிடம்தான் பேசவேண்டும், மாறாக வேறொருவரிடம் பேசி ரீமேக் செய்தால் அதை சும்மா விடமாட்டோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.
ஆக ஒரு சுவாரசியமான சண்டை காத்திருக்கிறது.











