சினிமா செய்திகள்

அஜீத்தைக் கேலி செய்தாரா குறளரசன் – சிம்பு தரப்பு விளக்கம்

வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, ஆதலால் காதல் செய்வீர் போன்ற பல கவனிக்கத் தக்க படங்களைக் கொடுத்தவர் சுசீந்திரன்.

இவர் சமீபத்தில் அஜித்தை அரசியலுக்கு வரச்சொல்லி கருத்து ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.

இந்த டீவீட்டை வைத்து சிம்புவின் தம்பியான குறளரசன் அஜித்தை கேலி செய்துள்ளார். மேலும் எங்கப்பன்தான்யா அடுத்த முதல்வர் என்றும் கூறியுள்ளார்.

தீபா பேரவையுடன் சேர்ந்து லட்சிய திமுக 234 தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறு அஜித்தை சீண்டும் வண்ணம் கருத்து சொல்லி இருப்பதால் அஜித் ரசிகர்கள் சிம்பு தம்பி குறளரசன் மேல் கோபம் கொண்டு அவரைத் திட்டிக்கொண்டிருக்கின்றனர்.

குறளரசனின் கருத்து Kuran Arasan T.Rajendar என்கிற முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

இது போலி கணக்கு என்றும் Kural Tr என்பதுதான் குறளரசனின் முகநூல் கணக்கு என்றும் சிம்பு தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது.

Related Posts