பேட்ட பட விவகாரம் – தேம்பியழுத கார்த்திக்சுப்புராஜ்
பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் முன்னோட்டங்களில் வரும் வசனங்களால் ரஜினி அஜீத் ரசிகர்களிடம் மோதல் உருவானது.
2018 டிசம்பர் 28 ஆம் தேதி பேட்ட படத்தின் முன்னோட்டம் வெளியானது. விஸ்வாசம் படத்தின் முன்னோட்டம் 30 ஆம் தேதி வெளியானது.
பேட்ட முனோட்டத்தில் ரஜினி, ‘எவனுக்காவது குடும்பம், பொண்டாட்டி, புள்ளை, செண்டிமெண்ட் இருந்தா ஓடிப்போயிடு. கொலை காண்டுல இருக்கேன்…கொல்லாம வுடமாட்டேன்’ என்று பேசியிருப்பார்.
அடுத்து வந்த விஸ்வாசம் பட முன்னோட்டத்தில், பேரு தூக்குதுரை ஊரு தேனி பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா ஒத்தைக்கு ஒத்த வாடா என்று அஜீத் பேசியிருந்தார்.
அதேபோல், விஸ்வாசம் முன்னோட்டத்தில் வில்லன் ‘என்கிட்ட இருக்குற பணத்துக்கு நான் நினைச்சா எல்லா ஏரியாவையும் வாங்குவேன்’ எனக்கூற, அஜித் ‘ஏறி மிதிச்சேன்னா ஏரியாவ இல்லை.. மூச்சு கூட வாங்க முடியாது’ எனப் பேசுவதும் ரஜினியைக் குறிக்கிறது என்றனர்.
இவை மட்டுமின்றி, கொல காண்டுல இருக்கேன் என ரஜினி பேசும் வசனத்துக்கு பதில் அளிக்கும் வகையில், ‘உங்கள பாத்தா கொல வெறி வரனும், ஆனா எனக்கு உங்கள பிடிச்சிருக்கே என்று அஜீத் பேசியிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.
இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு கேலிப்படங்கள் நிறைய உருவாக்கப்பட்டன.
அவற்றில் ரஜினிக்கு அஜீத் பதிலடி கொடுப்பது போல இருப்பதால் ரஜினி தரப்பு மனவருத்தத்தில் இருக்கிறது.
ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக்சுப்புராஜூம் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம்.
2019 ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நன்பர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார் கார்த்திக்சுப்புராஜ். அப்போது இதுபற்றிப் பேசியவர், தலைவர் ரஜினி எவ்வளவு பெரிய ஆள், அவரையே கேலி செய்து அசிங்கப்படுத்துகிறார்களே, என் படத்திலா இப்படி நடக்கவேண்டும் என்று சொல்லித் தேம்பி அழத் தொடங்கிவிட்டாராம்.
நண்பர்கள் அவரைச் சமாதானம் செய்து அமைதிப்படுத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது.











