கமல் 232 ஆவது படத்தின் பெயர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அவர் நடிக்கும் 232 ஆவது படத்தைத் தயாரிக்கிறது. அந்தப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது.
இன்று கமலின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி அப்படத்தின் பெயரும் குறுமுன்னோட்டமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கமலின் 232 ஆவது படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதேபெயரில் 1986 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் ஒரு படம் வெளியானது. கமலின் ஒரு கோடி ரூபாய் கனவு என்று சொல்லப்பட்ட அந்தப்படத்தில்தான் முதன்முறையாக கணினி பயன்படுத்தப்பட்டது.
34 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதேபெயரில் கமல் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.











