சர்கார் படத்துக்கு எதிராகப் பேசிய பாஜக – விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு
விஜய் நடித்த மெர்சல் படத்தைப் பற்றி பாஜகவின் எச்.ராஜா கிளப்பிய சர்ச்சையால் அப்படம் பெரிய வசூலைப் பெற்றது.
அதுபோல இப்போது சர்கார் படம் பற்றி தமிழிசை செளந்தர்ராஜன் பேசியிருக்கிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்,
சர்காருக்கு நான் எதிராக இல்லை. திரைத்துறையிலேயே மிகப்பெரும் குழப்பம் நிலவி வருகிறது. யாருடைய கருவையோ அவர்கள் எடுத்துவைத்துக்கொண்டு கரு மற்றவருடையது உடல் என்னுடையது எனக் கூறுகின்றனர். ஆக அவர்கள் துறையிலேயே நேர்மையை கடைப்பிடிக்க முடியாதவர்கள், அரசியலுக்கு வந்து மிகப் பெரிய நேர்மையான ஆட்சியைக் கொண்டுவர முடியும் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. திரைப்படத்திலேயே சர்காரை சரியாக நிர்வகிக்க முடியாதவர்கள் மக்களுக்காக சிறந்த சர்காரை உருவாக்க முடியும் எனப் பேசுவதெல்லாம் திரைப்படத்தைப் போன்ற ஒரு மாயை மட்டுமே. இதை, பாக்யராஜ் போன்றவர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். கள்ளக் கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றிய படம் எடுக்கிறார்கள்
என்று சொல்லியிருக்கிறார்.
இதனால் விஜய் ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்கின்றனர். ஆக சர்ச்சை ஆரம்பம்.











