பிக்பாஸ் பாடகி சின்னத்திரை நடிகர் திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியில் கலந்துகொண்டவர் என்எஸ்கே ரம்யா.கலைவாணர் என்.எஸ்.கிருட்டிணனின் பேத்தியான இவர் பிரபல பாடகியும் ஆவார்.
இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மிகவும் வரவேற்பைப் பெற்றார்.அவரின் குணத்தையும் பல ரசிகர்கள் பாராட்டினார்கள்.
இந்த நிலையில் அவருக்கும், நீலகுயில் உள்ளிட்ட சில நெடுந்தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் சத்யாவுக்கும் திருமணம் முடிவாகியுள்ளதாக செய்தி வந்துள்ளது.
பிக்பாஸில் ரம்யாவோடு பங்குபெற்ற ஜனனி, ரம்யா மற்றும் சத்யா ஜோடியின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார்.