சினிமா செய்திகள் நடிகர்

ரஜினி தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க இதுதான் காரணமா?

நீண்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் தீபாவளி சிறப்பு பேட்டி
சூப்பர்ஸ்டார் 2.O
தீபாவளி அன்று மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்நிகழ்ச்சி வரவிருக்கிறது.

தமிழ்த்திரையுலகில் மிகவும் ஆச்சரியமாகப் பேசப்படுகிறது இந்நிகழ்ச்சி.

ரஜினி தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கிறார் அதுவும் படத்தின் விளம்பரத்திற்காக என்பதுதான் ஆச்சரியத்திற்குக் காரணம்.

உச்சநட்சத்திரமான ரஜினியே பேட்டி கொடுப்பது நல்ல முன்னுதாரணம் இதை மற்ற கதாநாயகர்களும் கடைபிடிக்க வேண்டும் என்கிற கருத்துகள் அதிகமாகப் பகிரப்படுகின்றன.

2ஓ படத்தின் செலவு திட்டமிட்டதைவிட பன்மடங்கு அதிகமாகிவிட்டது என்பதால் பதட்டப்பட்ட ரஜினி பெரிய நட்டம் ஏற்பட்டுவிடாமல் தடுக்கவே படத்தை விளம்பரப்படுத்த முன்வந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ரஜினி பேட்டி கொடுப்பதற்கு இன்னொரு காரணமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அது என்ன? படத்தில் நடிக்க சம்பளம் வாங்கியது மட்டுமின்றி படத்தின் இலாபத்திலும் குறிப்பிட்ட விழுக்காடு தனக்குத் தரவேண்டும் என ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம் ரஜினி.

படத்துக்கு ஏற்கெனவே பெரும் செலவு என்பதால் அதைத் தாண்டி வசூல் செய்தால்தான் ரஜினிக்கு பங்கு கிடைக்கும் என்கிற நிலை. எனவே ரஜினி இறங்கி வந்து தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Related Posts