October 17, 2026
சினிமா செய்திகள்

ரஜினியை மறந்த இந்தி நடிகர் – திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி,அக்‌ஷய்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 2 ஓ.

இப்படத்தின். புதிய முன்னோட்டம் நேற்று (நவம்பர் 3,2018) வெளியிடப்பட்டது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் அந்த முன்னோட்டத்தைப் பாராட்டி இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ட்வீட் செய்துள்ளார்.

அதில்,2ஓ டிரெய்லர் பார்த்தேன் ஷங்கர் சார் சிறப்பாக செய்திருக்கிறார் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்
என்று சொல்லி அதில் இயக்குநர் ஷங்கர் மற்றும் அக்‌ஷய்குமார் ஆகியோரின் டிவிட்டர் முகவரியை குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் ரஜினி பெயரையோ ரஜினியின் டிவிட்டர் முகவரியையோ குறிப்பிடவில்லை.

இதனால் ரஜினியை எப்படி மறந்தீர்கள்? என்பது உட்பட அவர் மீது காரமாக விமர்சனங்கள் வைத்துக்கொண்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

Related Posts