சினிமா செய்திகள்

ரஜினி பட டீசருக்கு சக்ஸஸ் பார்ட்டி கொடுத்த ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 13 அன்று இப்படத்தின் டீசர் வெளியானது.

வெளியானது முதல், தொடர்ந்து பல சாதனைகளை படைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியான டீசரை 32.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

யூடியூப்பில் மட்டும் 24.8 மில்லியன் பேரும், ஃபேஸ்புக்கில் 4.1 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3.5 மில்லியன் பேரும் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ் டீசரை 4,18,000 பேரும், ஹிந்தி டீசரை 3.7 மில்லியன் மற்றும் தெலுங்கு டீசரை 39,000 பேரும் பார்த்து ரசித்துள்ளனர்.

இவை அத்தனையும் முதல்நாள் நடந்தவை அடுத்தடுத்த நாட்களில் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

2.0 டீசருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தது.

இயக்குநர் ஷங்கர் ஒருபடி மேலே போய், படக்குழுவினர், நண்பர்கள் ஆகியோருக்கு பெரிய பார்ட்டி கொடுத்திருக்கிறார்.

லீலாபேலஸ் நட்சத்திர விடுதியில் அந்த பார்ட்டி மிக உற்சாகமாக விடிய விடிய நடந்திருக்கிறது.

டீசருக்கு சக்ஸஸ் பார்ட்டி என்பதைக் கேட்டதும், அஞ்சான் பட டீசருக்கு நடந்த சக்ஸஸ் பார்ட்டி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

Related Posts