துப்பாக்கிமுனை டீசருக்கு மணிரத்னம் பாராட்டு – படக்குழு மகிழ்ச்சி
தினேஷ் செல்வராஜ் என்பவரது இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் `துப்பாக்கி முனை’. இந்தப் படத்தில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.
கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, எல்.வி முத்துகணேஷ் இசையமைக்கிறார். ராசாமதி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசரை, செப்டம்பர் 16 மாலை
இயக்குநர் கவுதம்மேனன் வெளியிட்டார்.
டீசரில் கம்பீரமான காவல் அதிகாரியாக வலம் வருகிறார் விக்ரம் பிரபு.
விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி அழகிய காதல்காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன.
இப்படத்தின் டீசரை பார்த்த இயக்குநர் மணிரத்னம், படக்குழுவினரை அழைத்துப் பாராடியுள்ளார்.
விக்ரம்பிரபுவின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் நன்றாக வந்திருப்பதாக இயக்குநர் தினேஷ் செல்வராஜ் மற்றும் ஒளிப்பதிவாளர் ராசாமதியைப் பாராட்டினாராம்.
முந்தைய படங்களைக் காட்டிலும் நடிப்பில் முதிர்ச்சி மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் வேகம் அதிகமாக இருக்கிறது என்று விக்ரம்பிரபுவைப் பாராட்டினாராம் மணிரத்னம்.
இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.











