September 22, 2026
சினிமா செய்திகள் நடிகர்

குஷ்பூ வேண்டாம் – சிம்புவின் முடிவை ஒப்புக்கொண்ட சுந்தர் சி

பவன் கல்யாண் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. சமந்தா மற்றும் பிரணிதா இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடித்தனர். நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படம், தமிழில் எடுக்கப்படுகிறது.

சுந்தர். சி இந்தப் படத்தை இயக்க, சிம்பு நாயகனாக நடிக்கிறார். சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரணிதா வேடத்தில் யார் நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

ஜார்ஜியாவில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தெலுங்கில் நதியா நடித்த நாயகனின் அத்தை வேடத்தில் குஷ்பூ நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், இயக்குநர் சுந்தர்சி மற்றும் சிம்பு ஆகியோர் கலந்தாலோசித்து அந்த வேடத்தில் குஷ்பூ நடித்தால் பொருத்தமாக இருக்காது என்று முடிவெடுத்துவிட்டார்களாம்.

இப்போது அந்த வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்கிறார்.

Related Posts